பரம சிவஞான மகனே
புவனங்களீரேழு மடக்கியே காத்திடும்
புவனேஸவரி யீன்ற புவனே
கவளமாமுகத் தண்ணலே காத்திடு
மங்குசபாசக் கையனே
குவளைக் கண்ணியை சென்னியில் மிலைந்த
கும்பழாவளைத் தெய்வமே
காண்பவர்க கரியனே காட்சிக் கினியனே
கருணை சொரி யானை முகனே
மாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து
மனம் புர்த்து மகிழ்வுண்டாக
விண்டுவின் தளைநீக்க வீரமுருகேசனுடன்
விரும்பியுரை செய்த விமலா
கொண்டல் தவழ ளவையெனுங் குருபதியில்
கோவில் கொண்ட கும்பழாவளைத் தெய்வமே
தெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்
தேவர ளவை யுருறையு நாதா
பங்குகொள் தொண்டரின் பாச வினையறுக்கின்ற
பண்ணவன் பெற்ற மகனே
துங்குவெண் நெஞ்சினில் பங்குகொள் ளாணவ
பாசத்தை நீக்குகின்ற
அங்குச பாசத்தாலதை யடக்கியே யருள்தரு
கும்பழாவளைத் தெய்வமே
பண்ணிறைந்த பாடல்களைப் பாடடியும் நான்
நின்பாதம் பணிந்து நின்றேன்
கண்ணிறைந்த கணபதியே கற்பகமே
கலைநிதியே காட்சி தந்து
விண்ணுலகஞ் சோ்வதன் முன் விரும்பு வரம்
தந்தென்னை விரைந்து காப்பாய்
குணங்காணக் கோதிலா மணம் பெருகக்
குவலயத்தைக் காக்கின்ற கும்பழாவளை தெய்வமே
பொங்கு புகழளவையிலே புகுந்த போது
உன் புந்தி தனில்
சங்கம் முழங்கியதோ சாமரைகள் வீசினதோ
சதிரே யாடும்
மங்கையர்கள் பாடினரோ மன்னவர் பணித்தனரோ
மன்னா சொல்வாய்
குங்குமத்தின் குழைத்தேய்வு குமுறி மணம் நாறுகின்ற
கும்பழாவளைத் தெய்வமே
அஞ்சடுக்குத் தீபமதை அருகிருக்கு மந்தணர்கள்
எடுத்து ஆட்ட
வஞ்சமனுக் கவியினுள்ள பஞ்ச வுணர்
சுட்டுபொடி சாம்பராக்கி
கஞ்சமலர்ச் சேவடியான் கழலொலிக்க
மணிநாத மேலொலக்க
கொஞ்சுகரங் ௯ப்பிநிற்பார் குலங்காக்கும்
கும்பழாவளைத் தெய்வமே
அளவை கவிக்குமரன் கலைஞானமணி லம்போ