உலகெங்கும் பரவிவாழும் அருணோதயன்களுக்கு ஓர் அவசர அழைப்பு.

உலகெங்கும் பரவி வாழும் அருணோதயன்களுக்கு ஓர் அவசர அழைப்பு

      புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினருக்கம் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம். எமது கல்லூரி பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் ஒழுக்கத்திலும் யாழ் மாவட்டத்தில் சிறந்த ஒரு பாடசாலையாக வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சி என்பது அளவெட்டி கிராமத்திற்கு ஒரு பெருமை சேர்க்கும் விடயமாகவும் எமது கிராமத்து மாணவர்கள் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இந்த வளர்ச்சிக்கு பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எமது கிராமத்து மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் இருந்து வருகின்றது. குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களின் உதவி பெரும் பங்காற்றி இருக்கின்றது. கடந்த 2012ம் ஆண்டு எமது கல்லூரிக்கு 22பரப்பு காணி லண்டன்இ கனடாஇ சுவிஸ்இ பிரான்ஸ்இ கொழும்பு ஆகிய பழைய மாணவர் சங்க அமைப்பின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டது இன்று அந்த இடத்தில் எமது கல்லூரியின் அத்தியாவசியத் தேவையான கட்டிடங்கள் அரசாங்கத்தினால் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டுக்குள் எமது கல்லூரிக்கு சகல வளங்களும் கொண்ட உதாரணமாக 2000பேர் இருக்கைகள் கொள்ளக்கூடிய நிகழ்வு மண்டபம் உயர்தர வகுப்புகளுக்கான ஆய்வுகூடம் மாணவர்களின் எண்ணிக்கை கூடுவதனால் நவீனமயப்படுத்தப்பட்ட கணனிக்கூடம் அத்துடன் கூடிய வகுப்பறைகள் விளையாட்டுத்துறையினருக்கான சகல வசதிகள் கொண்ட உள்ளக அரங்க ஆசிரியர் விடுதிஇ அதிபர் விடுதிஇ பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுதல்  சகல வளங்களையும் கொண்ட திட்டத்தை அரசாங்கம் எமது கல்லூரிக்கு வழங்கியுள்ளது. இத் திட்டம் வழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் எம்மிடம் 22 பரப்பு காணி கைவசம் இருந்ததனாலும் கல்லூரியின் வளர்ச்சியின் காரணமாகவும்  இத் திட்டம் வழங்கப்பட்டது. முழுத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எமக்கு காணி போதாமல் உள்ளது.

      ஆகவே இன்னும் 10 பரப்புக் காணியை நாம் கொள்வனவு செய்வதாக அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளோம.;; ஆகவே எமக்கு வழங்கப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்ற நாம் புதிதாக வேண்டப்பட்ட காணிக்கு அருகாமையில் டச்சு றோட்டை முகப்பாக கொண்ட 9 பரப்புக் காணி எமக்கு வழங்குவதாக காணி உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். இக்காணியை கொள்வனவு செய்வதன் மூலம் எமது கல்லூரி விஸ்தரிக்கப்பட்டு ஒரு புறம் பிரதான வீதியை கொண்ட முன் பக்கமாகவும் மறுபுறம் டச்சு றோட்டை கொண்ட முகப்பாகவும் மாணவர்கள் இரண்டு பக்கமாக இலகுவாக கல்லூரிக்கு வந்து செல்லக்கூடிய வசதிகளைக் கொண்ட கல்லூரியாக அமையும். ஆகவே இக் காணியை கொள்வனவு செய்து கொடுப்பதன் மூலம் எமக்கு கிடைக்க வேண்டிய சகல திட்டங்களையும்  நாம் பெற முடியும். இச் சந்தர்ப்பத்தை தவற விடாமல் சகல பழைய மாணவர்களும் உதவி செய்வதன் மூலம் எமது கல்லூரி சகல வளங்களையும் பெற்று சிறந்த கல்லூரியாக திகழும் என்பதில்  ஐயம் இல்லை. இக்காணி கொள்வனவுக்கான நிதி திரட்டல் முயற்சியாக லண்டன்இ பிரான்ஸ்;இ அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் னுநஉநஅடிநச  ரூ குநடிசரயசல  மாதம் இன்னிசை மாலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கும் உங்கள் ஆதரவுகளை வழங்குவதுடன் காணிக்குப் பங்களிப்புச் செய்ய விரும்பும் பழைய மாணவர்கள் எமது கல்லூரியின் வங்கி இலக்கத்திற்கு வைப்புச் செய்துவிட்டு எமக்கு அறியத் தரவும். பங்களிப்புச் செய்பவரின் விபரங்கள் அனைத்தும் எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். காணிக் கொள்வனவிற்கு எமக்கு 50லட்சம் ரூபா தேவைப்படுகின்றது. ஒவ்வொரு பழைய மாணவர்களும் சிறுசிறு தொகையாக உதவி செய்வதன் மூலம் இதனை நிறைவேற்ற முடியும்.

                        நன்றி

                                            அதிபர்

                                         நா.கேதீஸ்வரன்

                                  யா/அருணோதயக்கல்லாரி

Advertisement

Comments are closed.