ஊர்க்கோலம் -ஊர் வந்து போன உறவின் உணர்வு- யோகன்

yoka 11ஆறு நான்கு வருடங்களின் பின்பு

ஆவலுடன் ஊர் சென்றேன்
காலமது கரைத்திட்ட கால் நூற்றாண்டின் -பின்பும்
பாசமது குறையாத பண்பான ஊர்மக்கள்
நேசமுடன் அழைத்து என்னை
நலம்கேட்ட நிகழ்வுகளை
நெஞ்சுருகி மகிழ்ந்து கொண்டேன்
*******************************************
ஊரில் உள்ள கோயிலெல்லாம்
ஒலி பெருக்கி பொருத்தியாச்சு
ஆறுகால பூசைகளுக்கும்
அலறியே அதிர வைக்கும்
நான்கு திசைகளிலும் நாலு வித பாடல்கள்
கேட்டு கிரகிப்பதற்கு அதி ஆற்றல் நமக்கு வேண்டும்
****************************************************************
வீதிகள் எல்லாம் வித விதமாய் புது கடைகள்
அத்தனை பொருட்களும் ஊரினிலே வாங்கிடலாம்
பொருட்கள் எல்லாம் இருந்தென்ன
விலை வாசி வானுயரத்தில்
எப்படி சமாளிக்கின்றார்களோ -எம்மவர்கள்
இறைவனுக்கே அது வெளிச்சம் .
**********************************************************************
DSC05321கும்பளாவளை ஐங்கரனின்
கோலாகல உற்சவ நாட்களில்
நேர்த்தியாய் சுவாமி தூக்கி
பக்தியுடன் வீதியுலா வரும்
தொண்டர் சபை தோழர்களின்
கட்டுப்பாட்டுடன் கூடிய தொண்டினை
பார்த்து நான் பல முறை வியந்ததுண்டு .
******************************************************
நாங்கள் தங்கியிருந்த நண்பரின் வீட்டினரோ
தினம் தினம் வித விதமாய் உணவு சமைத்து -எம்மை
திக்கு முக்காட வைத்து விட்டனர்
அவர் தோட்டத்து வாழை குலைகள்
கப்பல் ,இதரை, கதலி என்று
வீட்டு வளையில் தொங்க வைத்து
திகட்டும் வரை தின்று மகிழ்ந்த
சிறப்பான நாட்களை -இறக்கும்வரை
மறக்கவே முடியாது
***********************************************************************
yoka 3உற்றவர் சுற்றவர் என்று
உரிமையுடன் எமை அழைத்து
பாசமுடன் விருந்தளித்த
பண்பான உறவுகளை
நேசமுடன் விழி கசிந்து
நன்றியுடன் நினைவு கொள்ளுகின்றேன்
*****************************************************
ஏதலி களாக எம்மவர்
ஊரைவிட்டு பிரிந்த போது -வீட்டு
நிலைகள் என்றும் கதவுகள் என்றும்
நெல்மணிகள் மூட்டை மூட்டையாக
மின்சார உபரணங்கள் என்று
திருடி தமது உடமையாக்கிய
ஒரு சிலர் பக்தி மானாக -ஆலய
வீதிகளில் பவனி வந்ததை பார்த்து
விசனம் அடைந்த துண்டு
****************************************************************
எது எப்படியோ
கஷ்டங்கள் வந்த போதும்
கள்வர்கள் சூறையாடிய போதும்
பாசம் ,பண்பு சற்றும் குறையாத
என் ஊர் உறவுகளை
நெஞ்சமதில் நிறுத்தி
விடைபெறுகின்றேன்
என்றும் அன்புடன்
இளைய தம்பி யோகேந்திரன்
நோர்வே

Advertisement

Comments are closed.