இவை பெரும்பாலும் தெருவோரங்களில் அமைக்கப்படும் நீா்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். அந் நாள்களில் மனிதா்களுக்கு மட்டுமன்றி மாடுகளும் நீா் இருந்த தொட்டிகளை எமது முன்னோர்கள் அமைத்தனர். மாடுகள் நீா் அருந்திய பின் தமது சுனைப்பை தவிர்க்க இவ் ஆவுரைச்சிக்கல்லில் தமது உடம்மைத் தேய்க்கும். இதனாலேயே மாடுகளை ஆ வென அழைப்பததனால் இக் கற்கள் ஆவுரைச்சிக் கல் என அழைக்கப்பட்டது.